தினகரனை ஒதுக்க ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது! எகிறும் தங்கத்தமிழ்செல்வன்

சென்னை,

திமுக அம்மா அணியில் இருந்து தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

‘தினகரனை ஒதுக்க நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எதன் அடிப்படையில் அவர் இப்படிப்பட்ட திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்’ என்று ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற  வழக்கில் கடந்த ஒரு மாதமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து  அவருக்கு ஆதரவு தெரிவித்து பல அ.தி.மு.க எம்.எல்.ஏ. க்கள் சென்னை அடையாறில் இருக்கும் அவரது வீட்டுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தினகரன் தீவிர ஆதரவு எம்எல்ஏவான தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

‘தினகரனை ஒதுக்க நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. எதன் அடிப்படையில் அவர் இப்படிப்பட்ட திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளராக தினகரன் இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை இதோடு நின்று விடாது. இன்னும் தொடரும், இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இதுவரை தினகரனுக்கு ஆதரவாக 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Who gave the power to devote ttv.dhinakaran! MLA Thanga Tamilselvan