ஜெனிவா

ந்திய தயாரிப்பான கோவாச்க்சின் தடுப்பூசி மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரொனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது.  விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.   இந்தியாவில் பெரும்பாலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு  மருந்துகள் செலுத்தப்படுகின்றன.

இதில் கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டறிந்து  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்த மருந்துக்கு உலக சுகாதார மையம் அவசரக் கால அங்கீகாரம் அளித்துள்ளது.  இதைச் செலுத்திக் கொண்டோர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

கோவாக்சின் மருந்து இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தாகும்.  இதற்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கவில்லை.  இதையொட்டி பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் மருந்துக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளது.

ஆனால் உலக சுகாதார அமைப்பு வெகுநாட்களாக அங்கிகாரம் வழங்காமல் இருந்ததால் இந்த மருந்தை செலுத்திக் கொண்டோரை பல நாடுகள் அனுமதிக்க மறுத்தன.  இந்நிலையில் தற்போது  கோவாக்ழின் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக்கால அங்கீகாரம் வழங்கி உள்ளது.  இதனால் வெளிநாடு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.