நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை, வேளாண் சட்டங்கள் ரத்து: கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்…

Must read

சென்னை: தமிழக 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்  இன்று  கவர்னர் பன்வாரிலால் புரோகித்  உரையுடன் தொடங்கியது.
கவர்னர் உரையில் கூறப்பட்டு உள்ளதாவது,

நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை, வேளாண் சட்டங்கள் ரத்து: கவர்னர் உரையின் சிறப்பம்சங்கள்…

தமிழ்நாடு நிதிநிலையின் உண்மையான நிலையை விளக்கும் வகையிக் வெள்ளை அறிக்கை ஜூலை மாதம் வெளியிடப்படும் –

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலம் இதுவரை 63 ஆயிரத்து 500 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

 தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதவர் என பாரபட்சமின்றி மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும்; சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட அரசாக இந்த அரசு செயல்படும்!

தமிழ்ந்சாட்டின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு பரிசீலித்து நிறைவேற்றும் என நம்புகிறேன்!”

தமிழக சுற்றுலாத் துறையில் பெரிய திட்டம் ஒன்று இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்

 பழங்கால கோட்டைகளும் அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் கொண்டுவரப்படும்
ரேஷன் அட்டைக்காக விண்ணப்பிக்கும் அனிவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள்
தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.
மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
வெள்ளக் கட்டுப்பாடு முறைகளை வகுக்க அதில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பேரிடர் மேலாண்மை சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல் துறைகளின் வல்லுநர்கள் அடங்கிய சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மை குழு அமைக்கப்படும்.
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, மூன்றாம் அலை முன்னேற்ற நடவடிக்கைக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது
2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும் 
வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் வகையில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும்.
ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் ஜான் ட்ரீஸ் , டாக்டர் எஸ் நாராயணன் ஆகியோரைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும். குழு உறுப்பினர்கள் பரிந்துரை அடிப்படையில் தமிழக பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் பெருந்திறள் போக்குவரத்து அமைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு.
லோக் ஆயுக்தவுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். 
திருநங்கைகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு சுற்றுலாவை மேம்படுத்த நடப்பாண்டில் பெருந்திட்டம் ஒன்று வெளியிடப்படும்.
OBC இடஒதுக்கீட்டில் தற்போதைய வருமான வரம்பினை ரூ.25 லட்சமாக உயர்த்த மத்திய அரசுக்கு கோரிக்கை.
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், ஒன்றிய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும்.
அரசுப் பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழக்குடியினருக்கான நிரப்பப் படாத காலியிடங்கள் சிறப்பு நியமனங்கள் மூலம் நிரப்பபடும்.
எல்லாருக்கும் எல்லாம் என்ற மாபெரும் சமூக தத்துவத்தின் அடிப்படையில் அனைவருக்குமான அரசாக இந்த அரசு இயங்கும், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் மக்களின் அரசாக நடைபோடும்
மதுரவாயல் சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் விரிவுபடுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசால் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும், முழுமையாக பயனளிப்பதை இந்த அரசு உறுதி செய்யும்
வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழை இணை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 343ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்துவோம் என கூறினார்.

More articles

Latest article