டெல்லி:

உ.பி. மாநிலத்தில் முசாகர் தலித் குடும்பத்தினருக்கு சோப்பு வழங்கி சுத்தமாகும் படி அறிவுறுத்திய முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி. மாநிலம் குஷிநகர் மாவட்டம் மெயின்பூர் தீனாப்பட்டி கிராமத்தில் உள்ள முசாகர் தலித் குடும்பங்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக தலித் மக்களுக்கு உ.பி. அதிகாரிகள் சார்பில் சோப்பு, ஷாம்பு, சென்ட் ஆகியவை வழங்கி முதல்வர் சந்திப்பில் போது சுத்தமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இது குறித்த செய்திகள் மீடியாக்களில் வெளியாயின.

உ.பி. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த டுவிட்டில் அவர் கூறுகையில், ‘‘அழுக்குபடிந்துள்ள தங்களது மன நிலையை பாஜக.வினர் எந்த சோப்பை கொண்டு சுத்தம் செய்யவுள்ளனர். இதை பாஜக.வினர் தயவு செய்து தெரிவிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.