ஐ.டி. துறை பணிநீக்கம்: மோடி அமைதி காப்பது ஏன் ? ஐ.டி. ஊழியர் அமைப்பினர் கேள்வி

Must read

சென்னையில் ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஒருவர் 2011-12-ல்  பணியில் சேரும்போது ரூ.ஒரு லட்சம் பணம் செலுத்தி ஒரு  உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.  அவர் நிறுவனத்தின் சேவைகளை ஒரு வருடத்திற்குள் விட்டுவிட்டால் அல்லது நிறுவனம் தனது சேவைகளை முடக்கினால், அந்தத் தொழிலாளி நிறுவனத்திற்கு பத்திரத் தொகையை இழந்துவிட வேண்டும் என்றும் கூறியது. ஆனால், அந்த நிறுவனத்தில் சேர்ந்த எட்டு மாதங்களுக்கு பிறகு, ஒருநாள் வழக்கம்போல்  பணிபுரியும் அலுவலகம் சென்றார். ஆனால், நுழைவுவாயிலின் ஒரு  காவலர் அவரது அடையாள அட்டையை பிடுங்கிக் கொண்டதுடன், ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்ட்தாகவும் எனவே வீட்டிற்கு செல்லும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்.  அவரது வழக்கை தற்போது , சென்னையில் இயங்கும்  ஐ.டி. ஊழியர்களுக்கான போராட்ட அமைப்பு (FITE) நடத்துவதாக அதன் துணைத்  தலைவர் ராஜிவ் காந்தி கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில், தகவல் தொழில்நுட்ப துறையில் வெகுஜன பணிநீக்கம் அதிகளவில் உள்ளது.  பல ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் சார்பில் FITE  வழக்குகளை எடுத்து நடத்தி வருவதுடன், களைட்தில் இரங்கி போராடியும் வருகின்றது.

பணபலமும், அதிகார பலமும் கொண்ட ஐ.டி.  பெரு நிறுவனங்கள் ‘தகுதியின்மை’ என்று காரணம்காட்டி  வெகுஜன பணிநீக்கங்கள் செய்வதை கைவிடக் கோரி FITE சளைக்காமல்  போராடிக்கொண்டிருக்கும் கொண்டிருக்கின்றது. தற்போது இந்த அமைப்பிற்கு ஆதரவு பெருகி வருகின்றது. பாதிக்கப் பட்ட ஊழியர்கள் தொடர்ந்து  இந்த அமைப்பை நாடிவந்து தங்கள் குறைகளை தெரிவிக்கின்றனர்.

பல நிறுவனங்கள்  வேலைக்கு ஆள் எடுக்கும்போதே பல்வேறு கட்ட  தேர்வுகள், நேர்காணல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் பின்னர் தான் தகுதியான  நபர்களை  தேர்வு செய்கின்றன. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் ஆறுமாதங்களில்  தகுதியற்ற நபர்களாக மாறுவது ஏன் ?

அப்படியெனில், அவர்கள்   வேலைக்கு தேர்வு செய்யும் தேர்வுமுறை மற்றும் செயல்முறை பற்றி என்ன விளக்கம்  ஐ.டி. நிறுவன்ங்களால் கூற முடியும் ?  தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆறுமாதம் வரை பயிற்சி அளிக்கின்றார்களே ? அந்த பயிற்சி தோல்வியிலா முடிகின்றது  ? அப்படியெனில் அந்த பயிற்சிமுறை  மீதுதானே தவறு ?  ஒரு  சில ஊழியர்கள் “தகுதியின்மை” காரணமாக பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறினால் நம்பலாம்,  ஆனால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பல்லாயிரக் கணக்கில் வேலையைவிட்டு விரட்டப்படுவது நிகழ்ந்து வருகின்றது”என்கிறார் ராசன்காந்தி.

“மேலும், இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் களில், விண்டோஸ் எக்ஸ்பி தான் இன்னும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. ஆனால், பெரும்பாலான கணினிகள் விண்டோஸ்-10 க்கு மாறி பல காலம் ஆகிவிட்டன “என்றார் ராசன்காந்தி.

ராசன் காந்தி

இந்த சட்டங்கள் பலவீனமான தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பலவீனமான நடைமுறைகளால் திணறடிக்கப்படுகின்றன, என்கிறார் ஜனாதிபதி FAT, வாசுமுத்தி கூறுகிறார். நாட்டில் பல்வேறு மாநில தொழிலாளர் நீதிமன்றங்களில் IT நிறுவனங்களின் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை இந்த மன்றம் குறிக்கிறது.

தோழர் பரிமளா

பலவீனமான தொழிலாளர்ச் சட்டமும், இருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமலும் இருப்பதுமே ஐ.டி.துறையில் நிகழ்ந்து வரும் வேலைநீக்கத்திற்கு காரணம். FITE அமைப்பினர் இவ்வாறு வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்காக இந்தியா முழுவதும் பல நீதிமன்றங்களில் வழக்கு நடத்திவருவது குறிப்பிடத் தக்கது.

நாட்டின் 155 பில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழில் நுட்பத் துறையில்  வழக்கமான பி.பி.ஓ  வேலை முறை அப்புறப்படுத்தப் பட்டு கொஞ்சம் கொஞ்சமாக  தானியங்கி (ஆட்டோமேஷன்) மற்றும்  செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் வருகையை தனதாக்கிக் கொள்ள  இந்தத் துறை முயற்சிக்கிறது.

தானியங்கி தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்விளைவாய்  2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 94,000 வேலைகள் இழக்க நேரிடும் என்று சின்னோவ் எனும் ஆலோசனை நிறுவனம் எச்சரித்துள்ளது.

எனவே, ஆட்டோமேஷன் அறிமுகப்படுத்தப்படுவதோடில்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்புவாத (உள்நாட்டு குடிமகன்களுக்கு  வேலைவாய்ப்பில் முன்னுரிமை) நிலைப்பாட்டின் காரணமாகவும்  ஐ.டி. துறையில்  நிலைமை மோசமாகிவிட்டது. உலகின் அரசுகளின் கொள்கைகள் மாறும்போது நாம் ஐ.டி நிறுவனங்களை மட்டும் குற்றம் சாட்டலாமா?  என கேள்வி கேட்போருக்கான பதில் என்னவென்றால், தொழிலில் வரும் சவால்களை முறையாக திட்டமிட்டு கையாள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு, அடிமட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்புவதல்ல தீர்வு.

 

டிஜிட்டல் இந்தியா என்று விளம்பரங்களில் பிரச்சாரம் செய்யும்  நரேந்திர மோடி கார்ப்பரேட் கம்பெனிகளின் இந்த வேலைநீக்கம் குறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என கேட்கின்றனர் FITE அமைப்பினர். மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போட்ன்ர திட்டங்கள் வேரும் வெற்று விளம்பரங்களாய் இருப்பதும், உண்மையில், இருக்கும் வேலைவாய்ப்பும் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழ்நிலை நிலவுவது யதார்த்தம்.

கடந்த பல வருடங்களாய் மென்பொருள் துறையில் பணிபுரியும் பணியாளர்களை “தகுதியில்லை” எனும் சொத்தைக் காரணங்களை வைத்து பணி நீக்கம் செய்யப் பார்க்கிறார்கள். புதிய தொழில் நுட்பத்திற்கு பணியாளர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்காமல், புதிதாய் வருபவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். இது குறைந்த சம்பளத்துக்கு ஆட்களை எடுத்துக் கொள்ளும் லாபநோக்க உத்தியே தவிர வேறில்லை. பணியாளர்கள் அல்லாத நிர்வாகத்திற்கு அனுசரித்துப் போகும் கார்ப்பரேட் அடிவருடிகளுக்கு இந்த பிரச்னை இல்லை என்பதுதான் உண்மை. மனிதனை லாபத்துக்கான இயந்திரமாய் முதலாளித்துவம் முடிந்த வரை கசக்கிப் பிழிந்து விட்டு, தூர தூக்கிப் போடுகிறது. இதில், திறமை என்பதெல்லாம் கண் துடைப்பு.

 

More articles

1 COMMENT

Latest article