டில்லி:

தொழிலாளர் நலனுக்காக என்று  ஒதுக்கப்பட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று மத்திய அரசை  உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

“ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட வரி கட்டுமானத் தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்டது.  இந்த தொகை  உரிய முறையில் செலவிடப்படவில்லை”  என்று  தொண்டு  ஒன்று  நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், “20 ஆயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே  சென்றது”  என்று கேள்வி எழுப்பியது.

மேலும், “தேநீர் விருந்துகளுக்கும் அதிகாரிகளின் விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கும்  இந்தத் தொகை செலவிடப்பட்டதா? மததியகணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜியின் பார்வைக்குக் கூட வராமல் இந்தப் பணம் எங்கே மாயமானது “ என்றும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.