சென்னை:
மூக ஆர்வலரான முகிலன் திடீரென மாயமானது குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி காவல்துறையினர், முகிலன் குறித்து தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் சென்னை முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன், கூடங்குளம் அணுஉலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போன்ற நாசகார ஆலைகளுக்கு எதிராக போராடிய வர். கடந்த பிப்ரவரி மாதம் 15ந்தேதி  சென்னைக்கு வந்த முகிலன் ஸ்டெர்லைட் தொடர்பான ஆவனங்களை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திடீரென மாயமானார்.

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் பதிவு செய்துள்ள நிலையில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்த அவர்  திடீரென  மாயமானார். அவர் குறிந்த எந்தவொரு தகவலும் கிடைக்காததால், அவரை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டிகே ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில்,முகிலன் குறித்த தகவல் தருவோருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று இன்று சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.