நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவன் ஒருவர் புத்தகத்தில் மறைத்து கத்தியை பள்ளிக்கு எடுத்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. சக மாணவனிடையே ஏற்பட்ட மோதல்  மாணவன் கத்தியை எடுத்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாயம் தறிகெட்டு சென்றுகொண்டிருக்கிறது. இது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு காரணம் வளர்ந்து வரும் சாதிய வேற்றுமை, போதை பொருள் நடமாட்டம் அதிகரிப்பு, அரசியல்வாதிகள் மற்றும் சில அரசியல் கட்சியினரின் சாதிய மனப்பான்மை, சாதி வெறுப்பு பேச்சு போன்றவை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சாதிய ரீதியிலான சலுகைகள் மற்றொரு தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனால் அனைத்து மக்களிடையேயும், சாதிய, மத வேற்றுமை அதிகரித்து இருப்பதால்,  மாணவர்கள் சமுதாயம், இளைஞர் சமுதாயம் தடம் மாறி சென்றுகொண்டிருப்பதாகவும், இதனால்  இளைஞர்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாக மாறும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

சமுத்துவ ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் என கூறும் கல்வியாளர்கள், திமுக ஆட்சிக்கு வந்த பிறகே தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம், சாதிய வேற்றுமை, பள்ளிகளில் சாதி மோதல், குடியிருப்புகளில் சாதி மத மோதல், குடிநீர் தொட்டிகளில் மலர் கலப்பு என பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த  நிலையில்,  நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில்  9ம்வகுப்பு மாணவர்கள் ஒருவர் புத்தகத்திற்குள் கூர்மையான கத்தி ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த குறிப்பிட்ட பள்ளியில்,  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  நேற்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். இதை பார்த்த மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் கூற, ஆசிரியர் வந்து புத்தகை பையை சோதனையிட்டத்தில், புத்தகத்திற்குள் கத்தி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஆசிரியர் உடனே   தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார். போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து வந்து  குறிப்பிட்ட அந்த 9-ம் வகுப்பு மாணவனிடம் இருந்த புத்தக பையை வாங்கி சோதனை நடத்தினர். அதில் புத்தகத்தினுள் மறைதைது வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அவனிடம் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில்,  அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் அந்த மாணவனை,கத்தியை காட்டி மிரட்டியதாக அதானால், அந்த மாணவன் தன்னை தாக்க வந்தால், அவனை தாக்க   முன்னெச்சரிக்கையாக புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்து வகுப்புக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைக்கேட்டு  போலீசாரும், ஆசிரியர்களும் திர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேசிய காவல்துறையினர், அவர்களை எச்சரித்துவிட்டு,   அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர்.

திமுக ஆட்சியில் தொடர்கதையாகும் தாக்குதல்கள்! ஆசிரியர்கள் கொந்தளிப்பு… வீடியோ

மதுபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள், மதுபாட்டிலால் ஆசிரியர்மீது தாக்குதல்! இது சிவகாசி சம்பவம்…

சென்னையின் அவலம்: வேளச்சேரி குருநானக் கல்லூரியில் வெடிகுண்டுகள் வீசி மாணவர்கள் மோதல் – 10 பேர் கைது….

நாங்குநேரி பள்ளி மாணவன் மீது கொலை வெறி தாக்குதல்: முதலமைச்சர் போனில் நலம் விசாரிப்பு – அமைச்சர்கள் நேரில் ஆறுதல்…

மீண்டும் நாங்குநேரி மாணவன் மீது தாக்குதல்