சென்னை: காப்பானே கள்வனான அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? என மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் 4762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் அறிக்கையளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? என கூறியுள்ளார்.
நீர்நிலைகளில் உள்ள அரசு ஆக்கிரமிப்புகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை மாநில அரசுமீது வைத்துள்ளது. ”நீர்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. பழங்கால நீர்நிலைகளைப் பாதுகாப்பது மாநிலத்தின் கடமை. நீர்நிலைகளையும், இயற்கையையும் பாதுகாக்கும் காவலர்களாக மாநிலங்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தது. இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி அது அனுமதிக்கப்படாது எனவும் தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவரும, நடிகருமான கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், ”நீர்நிலைகளில் உள்ள அரசு ஆக்கிரமிப்பு களை எப்போது மீட்போம்? அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?
தமிழகத்தில் 4,762 அரசுக் கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அறிக்கை அளித்துள்ளார். திராவிட அரசுகள் ஓடும் நீரின் வேரையறுத்த வேதனை வரலாற்றின் ஒப்புதல் வாக்குமூலம் இது. காப்பானே கள்வனான துயர சரிதையை மாற்றியெழுதி அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்?”
என கேள்வி எழுப்பியுள்ளார்.