விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ படத்தில் நயந்தாரா நடித்தார். அப்படத்தில் பணியாற்றும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போதுதான் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர்.
டைரக்டர் விக்னேஷ் சிவன், நயன்தாரா காதல்ஜோடிகள் பற்றியும் அவர்கள் திருமணம் பற்றியும் அடிக்கடி நெட்டில் தகவல் வருகிறது. திருமணம் நடந்த பாடில்லை.

நயன்தாராவுடன் எப்போது திருமணம் என்று இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது,’ பல இணைய தள பக்கங்களில் எங்களுக்கு 22 முறை யாவது இதுவரை திருமணம் செய்து வைத்திருப்பார்கள். எங்கள் திருமணத் துக்கு முன்னதாக இருவருமே சில நோக்கங்கள் நிறைவேற்ற எண்ணி இருக் கிறோம். சில திட்டங்களையும் செயல் படுத்த வேண்டி உள்ளது. அதனை முடித்த பிறகுதான் தனிப்பட்ட எங்கள் வாழ்க்கை பற்றி எண்ண உள்ளோம்.
எங்கள் கவனம் முழுவதும் சினிமாவில் தான் இருக்கிறது. லவ் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது கல்யாணம் செய்துகொள்வோம். அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்வோம்’ என விக்னேஷ் சிவன் கூறினார்.

[youtube-feed feed=1]