ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ரஜினியின் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்தருக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் படத்தின் டீசர் வரும் 22ல் வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ல் அல்லது ஜனவரி 1ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று படத்தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.