சென்னை:

மிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், அது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்து வீர்கள்? என தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழக  உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கேற்ப வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வருவதாக கூறி கால தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்த உச்சநீதி மன்றத்தில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி திமுக உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை களின்போதும், தமிழகஅரசு பல்வேறு காரணங்களை கூறி அவகாசம் கோரி வந்தது.

கடந்த மே மாதம் 5ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  தமிழக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில்,  ”உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன்பாக மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த சரிபார்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இன்னும் அரசுக்கு அளிகவில்லை. எனவே இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும்” என  கோரப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையின் போது, உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தாமல் இருக்கிறீர்கள்? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜனரா வழக்கறிஞர், தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரையறை செய்யும் பணி காரணமாக தேர்தலை நடத்த முடியவில்லை என்று மீண்டும் காரணம்க கூறியது.

இதையடுத்து,  தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து  2 வார காலத்திற்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.