பதவியேற்பு எப்போது: சசிகலாவின் பர்சனல் ஜோதிடர் சொல்வது என்ன?

அ.தி.மு.க. வட்டாரத்தில், “சூட்கேஸ் ஜோதிடர்” ரொம்பவே பிரபலம். ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக விளங்கிய ஜமால் என்பவரைத்தான் இப்படி சூட்கேஸ் ஜோதிடர் என்று அழைக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் சொல்ல போயஸ் கார்டனுக்கு செல்லும்போதெல்லாம் ஒரு சூட்கேஸுடன் வருவார் இந்த ஜோதிடர். ஆகவேதான் இந்த அடைமொழி.

இவர் குறித்து அதிகமுக வட்டாரத்தில் வியந்து பேசுவார்கள். அதாவது, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை செல்வார் என்றும் இவர் கூறியபோது அதை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அப்படியே நடந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெல்லும் என்று சொன்னபோது அம்மா( ஜெயலலிதா)வே நம்பவில்லை. அதுவும் நடந்தது. ஆகவேதான் அவருக்கு கார்டனில் தனி செல்வாக்கு” என்பார்கள் அதிமுக முக்கியஸ்தர்கள்.

மேலும் இவர்கள், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜமால், சசிகலாவின் ஆஸ்தான ஜோதிடராகிவிட்டார்.  இவர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார். அதே போல ,முதல்வர் பொறுப்பேற்கும் நேரத்தையும் இவர் குறிப்பிட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

அந்த ஜோதிடர் குறிப்பிட்டு சொல்லியிருப்பது இதுதானாம்:

“சசிகலாவின் ஜென்ம ராசி, மீனம்.  ஜென்ம லக்னம் சிம்மம்.  அவருக்கு தற்போது செவ்வாய் திசை நடைபெற்று வருகிறது.

சசிகலாவின் தசா நாதனானக விளங்குபவர் செவ்வாய். தற்சமயம் அவர், மீன ராசிக்குள் சஞ்சரிக்கிறார்.

அதே போல, செவ்வாயின் விருட்சிக ராசியில் , மீன ராசிக்கு 9 ம் வீட்டில்  சனிபகவான் சஞ்சரிக்கிறார்.

மேலும் ஜாதகருக்கு சூரிய பகவான் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார்.

மேலும், தற்சமயம் சசிகலாவின் ராசிக்கு 11 ல் அமர்ந்து யோகத்தை வழங்கிடும் நிலையில் இருக்கிறார் சூரிய பகவான்.

இந்த ஜாதக அமைப்பு, சசிகலாவுக்கு பெரும் பதவிகளை அளிக்கும். ஆகவே அவர் முதல்வராவது உறுதி.

வரும்  தை பூசம் ( 9.2.2017 ) அன்று  சசிகலா, முதல்வராக பதவியேற்றால் நீண்ட காலம் முதல்வராக ஆட்சி செய்வார்.  எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை முறியடித்து வெற்றிகரமாக உலா வருவார்” என்று சொல்லியிருக்கிறாராம் சூட்கேஸ் ஜோதிடர் ஜமால்.

அப்படியே தமிழகத்தோட தலை எழுத்து எப்படி இருக்குன்னும் கணிச்சு சொல்லுங்க ஜமால் சார்!

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: When sworn Sasikala? Sasikala's personal astrologer to say what?, பதவியேற்பு எப்போது: சசிகலாவின் பர்சனல் ஜோதிடர் சொல்வது என்ன?
-=-