பெங்களூரு: கர்நாடக தலைநகரில் அமைந்த அரசு மருத்துவமனையான விக்டோரியாவில் சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலா, 31ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில், அவர் எப்போது சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் உடல்நிலை கிட்டத்தட்ட சகஜநிலைக்கு வந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவர் ஜனவரி 31ம் தேதியான நாளை, டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
ஆனால், உடனடியாக அவர் சென்னை திரும்புவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், அவர் சிலகாலம் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பெங்களூருவில் சில நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும் அவர், பிப்ரவரி 4 அல்லது 5ம் தேதி வாக்கில், காரில் சென்னை திரும்புவார் என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டிற்குள், 4 ஆண்டுகள் கழித்து நுழையும் அவருக்கு, பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.