புதுடெல்லி:

பத்மபூஷன் விருது வழங்கிய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் நெற்றியை தொட்டு ஆசிர்வதித்தார் 8 ஆயிரம் செடிகளை நட்ட 107 வயது சாலுமரடா திம்மக்கா.


கர்நாடகாவைச் சேர்ந்த சாலுமரடா திம்மக்கா. 107 வயதான இவர் இதுவரை 8 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டு சாதனை புரிந்துள்ளார். தனக்கு குழந்தை இல்லையே என்ற கவலையில் தனது 40 வயதில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதன்பின்னர் தன் கணவரின் ஆதரவுடன் கடந்த 65 ஆண்டுகளில் 8 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ளார்.

மரங்களின் தாய் என்றழைக்கப்படும் இவருக்கு சனிக்கிழமை பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கேமிராவை பார்க்குமாறு திம்மக்காவை குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். அப்போது, குடியரசுத் தலைவரின் நெற்றியை தொட்டு திம்மக்கா ஆசிர்வதித்தார்.

அவரது செயலைப் பார்த்த குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்கள் புன்னகைத்தவாறு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.