விழுப்புரம்:

விக்கிரவாண்டிய இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்ததும் நடத்தப்படும் என்று கூறினார்.

தமிழகஅரசு உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், திமுக தலைவரின் தகவல்,  அடுத்த ஆட்சிக்குப் பிறகே தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதுபோல தெரிகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக புகழேந்தி களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை ஆதரித்து இன்று காலை  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில் நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  பல இடங்களில் பொதுமக்களுடன் அமர்ந்து கலந்துரையாடியதுழடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்.

பிரசாரத்தின்போது, அந்த பகுதில் சென்ற பேருந்தில் ஏறி, அங்கிருந்த பயணிகளிடையே வாக்கு சேகரித்தார். வாகனத்தின் சென்றபோது குழந்தை ஒருவருக்கு பெயர் வைக்க பெண் ஒருவர் வலியுறுத்தினார். அந்த குழந்தைக்கு பெயர்  சூட்டினார். தொடர்ந்து வீதிவதியாகவும் சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடையே பேசிய ஸ்டாலின்,  சீனாவின் பிரதமர் மாமல்லபுரம் வருகை தந்ததால், அந்த நகரை சிங்கப்பூரை மிஞ்சும் அளவுக்கு  சுத்தம் செய்து அழகுபடுத்தி இருக்கிறார்கள் என்றவர், வெளிநாட்டு அதிபர் வரும்போது சுத்தம் செய்கிறார்கள். ஆனால், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் உள்ளார்கள் என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல்உள்ளது. உள்ளாட்சி பகுதிகள் வளர்ச்சி பெற, உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தியிருக்க வேண்டும், ஆனால்,  உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற அச்சத்தினால், தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு  தள்ளிப் போட்டுக்கொண்டே  வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என்று கூறினார்.

பாஜக.,வின் அடிமை அரசாக உள்ள அதிமுக அரசுக்குப் பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தலை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வீர் எனக் கேட்டுக்கெள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேச்சை வைத்து பார்க்கும்போது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு இல்லை என்பது உறுதியாகிறது.