லண்டன்:  இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், #இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன், தொலைதூரக் கரைகளைக் கடந்து வீட்டின் நறுமணத்தை எடுத்துச் சென்ற வரவேற்பு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டள்ளது.

லண்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஜெர்மனியில் ரூ.7020 கோடி மதிப்பிலான முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார். இதை முடித்துக்கொண்டு தற்போத இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்தில் கால்வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.