இதுகுறித்து நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் குறைந்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது .
பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதை கவனத்தில் கொண்டு நாளை கோவைக்கு நேரடி பயணம் மேற்கொள்கிறேன்.
அவசர கால பயணம் என்பதால் கழக நிர்வாகிகள் யாரும் நேரில் வரவேற்பதற்கும் , சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில் ஒன்றிணைவோம் வா செயல்பாட்டின் அடிப்படையில் பசியைப் போக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கின்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.