வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி 20 நாடுகளில் உள்ள சமூக சேவகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உட்பட 1400 பேரை உளவு பார்த்த இஸ்ரேல் நிறுவனம் NGO Group மீது வாட்ஸ்அப் நிறுவனம் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மகாணத்தில் வழக்கு தொடுத்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
வாட்ஸ்அப் செயலியில் உளவு பார்த்த 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியப் பத்திரிக்கையாளர்களும் உளவுப்பார்க்கப்பட்டதாகவும், இந்திய அரசியல் தலைவர்களும் உளவுப்பார்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் வாட்ஸ்அப் இந்த பாதுகாப்பு குளறுபடியால் வாட்ஸ்அப் நிறுவனத்தினை தவிர்த்துவிட்டு இதேபோன்ற தனிநபர் பாதுகாப்பு செய்தி வழங்கும் டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளை பயனாளர்கள் நிறுவி வருகின்றனர்.
சூழ்நிலையில் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு குறைபாடு அதன் பயனாளர்களிடையே நம்பத்தன்மையை இழந்து உள்ளது.
ஏறக்குறைய 40 கோடி பேர் இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தி முதல் இடத்தில் இருந்து வந்த வாட்ஸ்அப் செயலி தற்போது நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதன் விளைவாக அதன் போட்டி செயலிகளான டெலிகிராம், சிக்னல் செயலியில் செல்போன் சந்தைகளில் அதிவேகமாக முன்னேறிவருகின்றன.
வாட்ஸ்அப்பில் மிக முக்கியமான விசயம் என்னவெனில் சிக்னல் புரோட்டோகால் மறைகுறியாக்கமுறையே (Signal Protocol Encryption) பாதுகாப்பு முறையே வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தும் பாதுகாப்பு நிரல். இதுதான் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதே சிக்னல் புரோட்டோகால் மறைகுறியாக்கமுறையே வாட்ஸ்அப், ஸ்கைப், வாட்ஸ்அப் மெசேன்ஜர் மற்றும் டுவிட்டர் போன்றவற்றில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் பல பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்கனவே இருந்து வருவதும் அதை நாங்கள் சரி செய்கின்றோம் என்று வாட்ஸ்அப் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொல்லி வரும் நிலையில் கடந்த 6 வருடங்களாக எங்களின் மீது எந்த குறையும் இதுவரை யாரும் சொல்லவில்லை என்பதிலிருந்தே எங்கள் செயிலியின் பாதுகாப்பு முறையினை நீங்கள் தெரிந்துகொள்ளலாம் என்று டெலிகிராம் நிறுவனத்தின் தோற்றுநர் திரு.துருவ் தெரிவித்துள்ளார்
டெலிகிராம் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம், வாட்ஸ்அப் உள்ள சில கட்டுப்பாடுகள் டெலிகிராம் செயலியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது