புதிய லோகோவுடன் இன்டர்நெட்டை கலக்க வரும் ஃபேஸ்புக்

Must read

மூக வலைதளங்களில் பிரபலமான ஃபேஸ்புக் புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த லோகோ, விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் சமூக வலைதளம், இன்று மக்களிடையே பின்னிப்பினைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையிலான வலைதளமாக உருவெடுத்துள்ளது.  மேலும், செய்தி பயன்பாடுகளான வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் அறிமுகப்படுத்தியது. இந்த சமூக வலைதளங்களும்  ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்தசில மாதங்களுக்கு  கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியது. இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.  பல்வேறு நாடுகளில் இதை தடை செய்யக்கோரி கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அதைத்தொடர்ந்து,  கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளை  தடை செய்தது.

இந்த நிலையில்தான் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த லோகோ,  பல வகையான பயன்பாடுகள் மற்றும் சேவைகளை இயக்கும் பேஸ்புக் “பிராண்டை” முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், முக்கிய சமூக வலைதளங்களில் இருந்து வேறுபட்ட சிலிக்கான் வேலி நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் புதிய லோகோ வெளியிடப்பட்டு உள்ளதாக அதன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி அன்டோனியோ லூசியோ தெரிவித்துள்ளார்.

புதிய பிராண்டிங், அடிப்படையில் மிருதுவான எழுத்தில், நிறுவனத்தின் பெயர் உள்ளதாக வும், “, பேஸ்புக்கிலிருந்து வரும் தயாரிப்புகளைப் பற்றி தெளிவாக இருக்க எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை நாங்கள் புதுப்பிக்கிறோம்,” என்றும்  லூசியோ தெரிவித்து உள்ளார்.

மேலும், “நாங்கள் ஒரு புதிய நிறுவனத்தின் லோகோவை அறிமுகப்படுத்துகிறோம், மேலும் பேஸ்புக் நிறுவனத்தை பேஸ்புக் பயன்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறோம், இது அதன் சொந்த வர்த்தகத்தை வைத்திருக்கும்.” புதிய கார்ப்பரேட் லோகோ “எங்கள் சேவைகளை இணைக்க பயன்படுத்தும் நபர்களுக்கும் வணிகங்களுக்கும் எங்கள் உரிமையாளர் கட்டமைப்பை சிறப்பாக தொடர்புகொள்வதற்கான ஒரு வழியாகும்” என்றும் கூறினார்.

More articles

Latest article