மூக வலைதளமான வாட்ஸ்அப்பில், அனுப்பப்படும் தகவல்கள், இனி ஒரே வேளையில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை 5 பேருக்கு பகிரப்படும் வசதி இருந்து வந்த நிலையில், தற்போது ஒரே ஒருவருக்கு மட்டுமே பகிரும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால், இந்திய புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிரபலமானது வாட்ஸ்அப். இதன் மூலம் பகிரப்படும் செய்திகள் சில நிமிடங்களில் லட்சக்கானோரை சென்றடைந்து விடுகிறது. அதனால், அனைத்து தரப்பினரும் தங்களையும், தங்களது நிறுவனங்கள் மற்றும் தேவைகளுக்கு வாட்ஸ்அப் சமூக வலைதளத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், சமூக விரோதிகள், இந்த தளத்தின்மூலம் வதந்திகளை பரப்பி மக்களிடையே அச்சத்தையும், வெறுப்பையும் வளர்ச்சி, ஜாதி, இன, மத மோதல்களையும் தூண்டி விடுகின்றனர். அதுபோன்ற தகவல்களை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்தாலும் மற்றொருபுரம் வதந்திகள் பரவுவதும் தடுக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது.

சமீப காலமாக கொரோனா தொற்று குறித்து தேவையற்ற வதந்திகளை சில சமூக விரோதிகள் பரப்பி,  நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால், இந்தியாவில் வாட்ஸ்அப் தகவலை ஒரே நேரத்தில் 5 பேர் வரை மட்டுமே பகிர வாட்ஸ்அப் நிறுவனம் கட்டுபாடு விதித்திருந்தது.

இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் ஊரங்கால்  பலர் வீட்டில் தங்கியுள்ளதால், வாட்ஸ்அப்  செயல்படு அதிகரித்து உள்ளது. அதுபோல பகிர்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் வதந்திகளும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இதை தடுக்கும் வகையில்,  பயனர்களை அடிக்கடி அனுப்பும் செய்தியிலிருந்து ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களுக்கு அனுப்புவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இனிமேல், ஒரு தகவலை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் வகையில் கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது.