டெல்லி: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சமூக ஊடக செயலியான Whatsapp முற்றிலுமாக முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இன்று மதியம் பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் முடங்கியது. இதனால்பயனர்களால் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக டிவிட்டரில் பல்பேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. டிவிட்டரில் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. கோளாறு சரி செய்யப்பட்டு வாட்ஸ்அப் விரைவில் செயல்படும் என மெட்டா நிறுவனம் கூறி உள்ளது.
[youtube-feed feed=1]