வாட்ஸப் (என்னாப்பு) உடனடி தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த செயலி உலக அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, நுட்ப ரீதியாக அதிகமான பயனென்றாலும் பயன்பாட்டு ரீதியாக இந்த செயலியில் போலிச்செய்திகளும், புரளிச்செய்திகளையும் பரப்புவதில் பெரும் பங்கு வகிக்கிறது இந்நிறுவனத்துக்கு பெரும் தலைவலியாக இருந்தது.

எனவே இந்த நிறுவனம் போலிச் செய்திகளை கண்டறியவும், புரளிச் செய்திகளை கண்டறிய பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது

Frequently forward செய்தி

இந்த புதிய வசதியானது 5 முறைக்கு மேல் ஒரு செய்தி பகிரப்படும்போது அந்தச் செய்தியின் மேல் frequently forwarded என்ற குறிப்பும் அந்த செய்தியின் மேல் வரும், இதன் மூலம் அந்தச் செய்தி அதிகமாகப்பகிரப்பட்டது என்று அறியலாம்

Forwarded x time சேவை

நீங்கள் ஒருவருக்கு ஒரு செய்தியை பகிர்ந்தபின் அந்த செய்திக்கான messege info வில் சென்று பார்த்தால் அந்த செய்தி எத்தனை முறை பகிரப்பட்டது என்று நமக்குத் தெரியும், இதன்மூலம் அது எத்தனை முறை பகிரப்பட்டது என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்

Short link – குறுமுகவரி வசதி

இந்த வசதி வாட்ஸப் பிசினஸ் பயனாளர்களுக்கு மேடம் கிடைக்கும்

இதன் மூலம் ஒரு குறுமுகவரி ஒன்றை வாட்ஸப் பயனாளர்களுக்குக் கிடைக்கும், இந்த குறு முகவரியின் மூலம் சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்

மேற்கண்ட வசதிகள் எல்லாம் புதிய வாட்ஸப் சோதனை (beta) பதிப்பில் மட்டுமே கிடைக்கும், விரைவில்  அனைவருக்கும் கிடைக்கும்

செல்வமுரளி