அரசு முறை சுற்றுப்பயணமாக மியான்மர் சென்றுள்ள மோடி அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது இது நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
ஏற்கனவே கடந்த 1960 முதல் 70 வரையில் சுமார் 1 லட்சம் பர்மியர்கள் இந்தியாவுக்கு விரட்டி யடிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் குறித்து இந்த பேச்சுவார்த்தையின் போது மோடி பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும், அந்நாட்டு மாநில கவுன்சிலர் ஆங்சாங் சுகியை சந்தித்து பேசினார். அப்போது ரோங்கியா முஸ்லிம்கள் நாடு திரும்புவது குறித்து, பேசியதாக கூறப்படுகிறது.
மியான்மரில் ரோங்கியா முஸ்லிம்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் அகதிகளாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.23 லட்சம் ரோங்கியா முஸ்லிம்கள் மியான்மர் ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகி நாட்டை விட்டு வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ரோங்கியா முஸ்லிம்கள் நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
சுமார் 40ஆயிரம் ரோங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.
மியான்மரில் ரோங்கியா முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற ஒரு நெருக்கடியான சூழல் 1962 ம் ஆண்டும் நிகழ்ந்துள்ளது.
ஜெனரல் நிவின் மூலம் நிகழ்த்தப்பட்ட ராணுவ தாக்குதல் காரணமாக பல நூற்றுக்கணக்கான பர்மிய இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பெரும்பாலான இந்தியர்கள் பர்மாவில் தலைமுறை தலைமுறைகளாக வசித்து வந்தனர். அவர்களில் பலரும் வெற்றிகரமாக வணிகங்கள் நடத்தியும், பலர் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசாங்க சேவைகளில் பணியாற்றியும் வந்தனர்.
ஜெனரல் நிவின்னின் ‘சோசலிசத்திற்கான பர்மிய சாலை’ கொள்கை யானது, பர்மா இந்தியர்கள் என அறியப்படும் இனரீதியிலான இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்களை தனிமைப்படுத்தி வெளியேற்ற வழிவகுத்தது.
நாட்டைவிட்டுவெளியேற்றப்பட்ட (இந்திய வம்சாவளி) வணிகர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர விமான சேவைக்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சுமார் 1 லட்சம் பர்மிய இந்தியர்கள் 1964ம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1960 களில் 70 களிலும் இது தொடர்ந்தது.
1964ம் ஆண்டு முதல் சுமார் 1 லட்சம் இந்தியர்கள் இந்தியாவுக்கு திரும்பினர்.
1948 ல், சுமார் 4 லட்சம் இந்தியர்கள் பர்மாவில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. .
அதன்பின்னர் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே உறவு குறைவானதாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பர்மாவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது.
சுமார் 50ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மியான்மர் சென்றுள்ள மோடி, மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தோர் குறித்து பேசுவார் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கடந்த கால உறவுகளை கடந்து, பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகளை புதுப்பித்து புதிய வழியை தொடங்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.