போலீசாரை அடித்து உதையுங்கள்!! கட்சியினருக்கு பாஜ தலைவர் உத்தரவு

Must read

கொல்கத்தா:

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது அளிக்கப்படும் புகார்களை வாங்க மறுக்கும் போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என கட்சியினருக்கு மேற்குவங்க மாநில பாஜ தலைவர் திலில் கோஷ் தெரிவித்துள்ளார்.

ஹவுராவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில கோஷ் மேலும் பேசுகையில், ‘‘போலீசாரை தாக்குவது என்பது மேற்கு வங்க ஜனநாயகத்தின் உரிமையாகும். போலீசாரை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கும் போது நாம் ஏன் அதை செய்யக் கூடாது. இதில் எந்த தவறும் இல்லை. மேற்குவங்க மாநிலத்தில் போலீசாரை தாக்கினால் தான் ஆட்சிக்கு வர முடியும். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பாஜக.வினரை தாக்கி வருகின்றனர்.

எங்களை அடித்துவிட்டு எங்கள் மீதே போலீசாரை வைத்து வழக்குப் பதிவு செய்கின்றனர். இது தொடரக் கூடாது. நாங்கள் அடியையும் வாங்கிக் கொண்டு நீதினமறத்திற்கு அலையமுடியாது. எங்களை அடித்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இல்லை என்றால் நாங்களும் அடிக்கிறோம். பின் எங்கள் மீது வழக்கு பதிவு செய்து கொள்ளலாம். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்தால் போலீசாரையும் தாக்க வேண்டும். முதலில் மிரட்ட வேண்டும். அதன் பின்னரும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு அவர்களை தாக்க வேண்டும்’’ என்றார்.

இவரது இந்த பேச்சு சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், கோஷ் இது போல் பேசுவது முதன்முறையல்ல. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கூந்தலை பிடித்து இழுத்து டில்லிக்கு வெளியே தூக்கி எறிய வேண்டும் என்று கோஷ் கடந்த டிசம்பரில் பேசினார்.

மேலும், கடந்த ஏப்ரலில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது ராமருக்கு பிறந்தவர்களக்கும், சட்டவிரோதமாக பிறந்தவர்களுக்கும் இடையே சண்டை நடக்கிறது என்று திமிர்தனமாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

More articles

Latest article