அரசியல் என்ற காட்டில், ஆரம்பம் முதலே திக்குத்தெரியாமல் அலைந்து திரியும் ஒரு அபூர்வ மனிதர்தான் தமிழருவி மணியன். அவரின் அரசியல் செயல்பாடுகளை ஆய்வு மாணவர்கள் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்தால், பலர் பைத்தியமாவது கன்ஃபார்ம்.
சில நாட்களுக்கு முன்னர்கூட, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக தமிழருவி மணியன்தான் அறிவிக்கப்படுவார் என்ற செய்திகளெல்லாம் பரவின. இந்திய அரசியல் வரலாற்றில், ஒரு கட்சிக்கு ‘மேற்பார்வையாளர்’ என்ற அபூர்வமான பதவியைப் பெற்ற ஒரே நபர் நமது அருவியாகத்தான் இருப்பார்.
ரஜினிகாந்த், ஐதராபாத் அப்போலோவில் சென்று படுத்தபோதே, தமிழருவி மணியன் மனதளவில் படாதபாடு பட்டிருப்பார்! இப்போதோ, மொத்தமும் உடைந்து நொறுங்கியாகிவிட்டது! குளோஸ்…
சமீப ஆண்டுகளில், திடீரென அரசியல் ஓய்வு அறிவிப்பதும், பின்னர் சம்பந்தமேயில்லாமல் திடீரென ரீஎன்ட்ரி ஆவதுமென காலம் கடத்திக் கொண்டிருந்தார். இனி, அதுபோன்ற காமெடிகளை அவர் நடத்துவதற்கான வாய்ப்புகள் சுத்தமாக துடைத்தெறியப்பட்டு விட்டன என்றே கூறலாம்.
அரசியல் வனத்தில், ஆரம்பம் முதலே திக்குதெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழருவி மணியன், இனி நிரந்தர அரசியல் வனவாசம் செல்ல வேண்டியதுதான்..!