* தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தமிழில் செய்யுள் வாசகங்களையெல்லாம் பேசி, கேட்பவர்களின் காதில் ரத்தம் வர வைப்பது, சம்பிரதாயமாக ‘வணக்கம்’ சொல்லி கொடுமை செய்வது, தமிழ் மிகவும் பழமையான, அழகான மொழி என்று குறிப்பிட்டு, அதை கற்றுக்கொள்ள தான் முயற்சிக்காமல் விட்டுவிட்டதாக கூறுவது. ஆக, இப்படி என்னதான் கொட்டாவி வரும் வசனங்களைப் பேசினாலும், தமிழ் மொழிக்கென்று மறந்தும் எதையும் செய்துவிடாமல் இருப்பது மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் தடுப்பது.
* மீனவர்களின் நலன் குறித்து மேடைகளில் பேசுவது. ஆனால், அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவது.
* விவசாயத்தைப் பெருமையாக பேசுவது. ஆனால், வேளாண்மையை அழிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவது. விவசாயிகள் நடக்கும் போராட்டங்களை துச்சமென மதித்து, அவற்றைப் புறக்கணிப்பது.
* எளிய மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி பேசுவது. ஆனால், தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபடுவது. குறைந்தபட்ச மனிதாபிமானத்தைக்கூட அவர்களிடம் காட்ட மறுப்பது.
* தேசப் பாதுகாப்பு குறித்துப் பேசுவது. ஆனால், நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளை, வலிமையான அண்டை நாட்டை எதிர்க்க துணிவில்லாமல் அவர்களிடம் பறிகொடுப்பது.
இந்திய சுதந்திர வரலாற்றில், இப்படியான ஒரு மாபெரும் அருவெறுக்கத்தக்க அரசியல்தான் மோடி குழுவினரின் அரசியல்! ஆனால், இந்த அரசியலுக்கும் ஓட்டுப்போடும் வகையில் மக்களின் அறிவுத்திறன் இருப்பதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு!