சென்னை:
ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் இணைப்புள்ள போன்களுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்கள் பெரும் அவதியடைந்தார்கள்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் பல இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சிக்னல் பிரச்சனை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், “தொடர்ந்து சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யலாம்” என்றும் ஆலோசனை கூறியுள்ளது.