சென்னை: திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசை கடுமையாக சாடி உள்ளார்.

தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அறிக்கையை மத்தியஅரசு ஏற்க மறுத்து வருவது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,   கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.  ஏற்கனவே,  தமிழகத்தின் சங்க கால பண்பாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைக்கப் பட்டுள்ள ஆய்வு சின்னங்களை,   “நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை”  என மத்திய அரசு மறுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கீழடி அறிக்கையை ஏற்க மறுத்து வருகிறது.

சமீபத்தில்  தமிழகம் வந்திருந்த மத்தியஅமைச்சிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆய்வு முடிவுகளின் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே அங்கீகரிக்க முடியும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து,    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை (புதன்கிழமை) மதுரையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில்,  முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! என மத்திய பாஜகவை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

“எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!” என்று பதிவிட்டுள்ளார். எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை!

இவ்வாறு கூறியுள்ளார்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகள் வந்தபிறகே கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்க முடியும்! மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்க

“கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை” ! மத்தியஅமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்