துவரை நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம் ஆகியவற்றைப் பற்றிப்பார்த்தோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது விசுத்தி

இது தொண்டைப்பகுதியில் இருக்கும் 16 இதழ்கள் தாமரை வடிவத்தில் உள்ள சக்கரமாகும், இது முதுகெலும்பு ,Cervical6 எழும்பு உள்ள தொண்டைக்குழியில் நரம்பு மண்டலங்கள், உடற்பகுதிக்கு பிரியும் இடமாக கருத்தப்படுகிறது.

இந்த விசுத்தி சக்கரப்பகுதி இடையே இடகலை, பின்கலை, நரம்புகள் இணைப்பு இருக்கிறது. இதில் விழுங்குதல், வெளியேற்றுதல், கொட்டாவி, விக்கல், குரல் ஒலி, புரையேறுதல், உமிழ் நீர் சுரத்தல், இருமல், ஏப்பம், விம்மல், மூச்சுக்குழாய் பிரிதல், உணவு செரித்தலுக்கு உதவுதல் போன்ற கழுத்துப்பகுதியில் இருக்கும் இச்சக்கரம் சூட்டசமமாக இயங்குகிறது. இப்பகுதியில் விழுங்குதலுக்கு  உதானன் என்ற வாயு உதவி புரிகிறது.

விக்கல் இருமல் , தும்மலுக்கு கிரிதரன் என்ற வாயு செயல்படுகிறது.  கொட்டாவி விடுவதற்கு கூர்மன் என்ற வாயு உதவுகிறது. இது உடலில் உள்ள பிராண வாயு குறைவாக இருக்கும்போது இந்த வாயு செயல்படுகிறது. சிறு குடலுக்கு உணவு நகர்ந்து செரிமானத்திற்கு ஏப்பம் என்ற செயல்பாட்டை அபாணன் வாயு செயல்படுகிறது.  குறிப்பாக நுரையீரலுக்கு சரியாக காற்றைச்செலுத்துவதற்கும், உணவுப்பாதையில் உணவு மட்டும் செல்லுவதற்கும் இப்பகுதி சூட்சுமமாக அமைகிறது.

மருத்துவப்பயன்
தைராய்டு மற்றும் பாரா தைராய்டு என்ற நாளிமில்லா சுரப்பியின் இருப்பிடமாக கருத்தப்படுகிறது. இந்த சுரப்பிகளை ஒழுங்குப்படுத்த இச்சக்கரம் உதவுகிறது

ஆன்மீகம்
ஆன்மீகத்தில் விசுத்தி விண் ஆற்றலின் சுழற்சி மையமாக கருத்தப்படுகிறது. திரிகான ஞானம் என்று சொல்லப்படும் முன்னோக்கி நடப்பதை(extra sensory perception) அறியும் தன்மை இச்சக்கரத்தில் தியானம் செய்தால் சித்தியாகும்.

புராணத்தில்  சிவன் உண்ட ஆலகால விசத்தை தொண்டைக்குழியில் பார்வதி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இது நம் உடலிற்குத் தேவையான ஆற்றல்களை மட்டும் உள்ளணுப்பி தேவையற்றதை தடுத்து தொண்டைக்குழியில்  சூட்சுமமாக பாதுகாப்பதாக கருத்தப்படுகிறது.

பிராணன் மனத்தொடும் பேராதடங்கிப்
பிராணனிருக்கிற பிறப் பிறப்பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறிவித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே

விசுத்தி சக்கரமானது பிராண வாயுவின் முக்கிய இடமாக கருத்தப்படுகிறது என்பது சித்தர்களின் வாக்கு

மருத்துவர் பாலாஜி கனகசபை, M.B.B.S, PhD(Yoga)
அரசு மருத்துவர்
கல்லாவி (போச்சம்பள்ளி)
99429-22002