
புனே: குறிப்பிட்ட வகையான ஆடுகளம்தான் வேண்டுமென இந்திய அணி கேட்பதில்லை என்றும், எந்தவகை ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கேற்ப விரைவாய் மாறிக்கொள்வதே வெற்றிக்கான வழி என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாரத் அருண்.
“குறிப்பிட்ட வகையான விக்கெட்டுகளை நாங்கள் கேட்பதில்லை. ஒரு நம்பர் ஒன் அணி என்ற முறையில், நீங்கள் எதை எதிர்கொள்கிறீர்களோ, அதை உங்களின் உள்நாட்டு நிலையைப்போல ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெளிநாட்டிற்குச் செல்லும்போது அந்தப் பிட்சின் தன்மையை கடைசி நேரத்தில் அனுமானிப்பதெல்லாம் கூடாது. அதை நமக்கு ஏற்ற ஒன்றாகவே நாம் பார்க்க வேண்டும். ஏனெனில், இரண்டு அணிகளுக்குமே ஒரே பிட்ச்தான் என்பதையும் உணர வேண்டும்.
பிட்சைப் பற்றி கவலைப்படுவதற்கு பதில், நமது பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். சீமிங் பிட்சி என்றால் அதற்கேற்பவும், சுழற்பந்துக்கு ஒத்துழைக்கும் பிட்சி என்றால், முதல் நாளிலிருந்தே எப்படி ஸ்பின் செய்வது என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும்” என்றுள்ளார் அவர்.
[youtube-feed feed=1]