சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு? – மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இது தொடர்பான வழக்கின் கடந்த விசாரணையின்போது, வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவில்,  2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துகள் இருந்ததாக தெரிவித்தது.

மேலும், 2016-2017ஆம் ஆண்டுக்கான வருமானவரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது. 1990-91 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி இருந்ததாகவும் தெரிவித்திருந்த நிலையில்,  2005-06 நிதியாண்டு முதல் 2011-12 வரை ஜெயலலிதா ரூ.6.62 கோடி வருமானவரி பாக்கி இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், வரி பாக்கிக்காக  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், அவரது ஐதராபாத் வீடு உள்பட  4 சொத்துகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் வழக்கின் இன்றைய விசாரணையை தொடர்ந்து, ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என்று தகவல் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

[youtube-feed feed=1]