பாலகோட் தாக்குதல் உண்மை என்ன? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு….! மோடியின் புளுகு…..?

Must read

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலகோட்டில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தாக்குதல் குறித்த சேத விவரமோ, தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய விவரமோ வெளியிடப்படவில்லை.

ஆனால், இந்த தாக்குதலை பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் அரசியலாக்கி வருகின்ற னர். நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாலக்கோட் தாக்குதல் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை தெரிவித்து மக்களிடையே பாஜகவுக்கு வாக்குள் சேகரித்து வருகின்ற னர்.

இந்த நிலையில், தாக்குதல் நடைபெற்றதாக கூறும் பாலகோட் பகுதியில், அதற்கான அடை யாளமே இல்லை என்று பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் ஆதாரங்களுன் செய்தி வெளியிட்டு உள்ளது.

இதன் காரணமாக பிரதமர் மோடியின் புளுகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய விமானப்படை நடத்திய  பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது 250 பேர் என்றும், 200 பேர் என்றும் ஆளாளுக்கு ஒரு எண்ணிக்கையை தெரிவித்து மக்களை குழப்பி வருகின்றனர்.

ஆனால், விமானப்படை அதிகாரிகளோ, தாக்குதலில் எத்தனை பேர்  கொல்லப்பட்டார்கள் என்பது குறித்து தெரியாது என்றும் கூறி வருகின்றனர்.

இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் பாலக்கோடு தாக்குதல் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் வான்வழியில் நுழைந்து எவ்வாறு வெளியேறின என்றும், பாகிஸ்தானால் ஏன் தாக்குதல் நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

 உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் நடமாடும் காட்சி 

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், தாக்குதல் நடைபெற்றதாக இந்தியா கூறும் பாலகோட் பகுதியின்  செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வான்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடைபெற்றதற்கான ஆதாரங்களே இல்லை என்று தெரிவித்து, அது சம்பந்தமான செய்ற்கைக் கோள் படங்களை வெளியிட்டு உள்ளது. அத்துடன், பாலக்கோடு அருகே இஸ்லாமிய மத பயிற்சி பள்ளியான மதரஸா அமைந்துள்ள படத்தை வெளியிட்டு உள்ளது.

ஆனால், பாலக்கோட்டில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், இந்த செயற்கைக்கோள் படங்கள் அவரின் கூற்றை பொய்யாக்கி உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்கள் இல்லை என்றும் அங்குள்ள 6 மதரஸா கட்டிடங்களும், நல்ல நிலையில் உள்ளன, அந்த பகுதியில் உள்ள மரங்கள்கூட சேதமாகவில்லை என்று தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்த, இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப்  ஆசியா என்ரோ ரோலிஃபிரேஷன் திட்டத்தின் இயக்குனரான ஜெஃப்ரி லெவிஸ், பாலகோட் தாக்குதல் மற்றும் அங்கு எடுக்கப்பட்ட செயற்கை கோள் படங்களை ஆய்வு செய்து இந்த தகவலை தெரிவித்து உள்ளார். இவர்  செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்வதில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக பாலகோட் தாக்குதல் குறித்த விவாதங்கள் மேலும் வலுவடைந்து வருகின்றன.

ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின்போது பல்வேறு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடித்த பிரதமர் மோடியும், பாரதிய ஜனதாவும், தற்போது தேர்தல் நடை பெற்ற உள்ள நிலையில், மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தமிழகத்தில்  பொதுவாக கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்று ஒரு பழிமொழி சொல்லப்படுவது உண்டு. ஆனால், தற்போது மோடி கூறி வரும் பொய்கள் 8 நாளைக்கு கூட தாங்காத  சூழ்நிலை உருவாகி உள்ளது….

ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செயற்கை கோள் படம்

புல்வாமா தாக்குதல், பால்கோட் பதிலடி போன்றவை பாஜக மீதான வாங்கு வங்கியை அதிகரிக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் மோடி மற்றும் பாஜக தலைவர்களுக்கு, தற்போது வெளியாகி வரும் பல உண்மைகள்….  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் இடியாகவும், பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதில் வியப்பேதுமில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article