சென்னை: தமிழக தலைநகரில் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கடுமையான வெப்பம் உள்ளிட்ட இயற்கை சார்ந்த காரணங்களே கூறப்படுகின்றன. ஆனால், உண்மையான காரணம் மோசமான நிர்வாகம்தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை மாநகரப் பகுதியில் 3 ஆறுகள், 1 கால்வாய், 16 சிறிய நீர்வழிப் பாதைகள் மற்றும் 4 நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவை உள்ளன. இந்த தொட்டிகளின் கொள்ளளவு 11057 மில்லியன் கியூபிக் அடிகள்.

மேலும், சென்னை நகரில் 4100 தண்ணீர் அமைப்புகள் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 150000 மில்லியன் கியூபிக் அடிகள். சென்னையின் வருடாந்திர சராசரி மழையளவு 1200 மில்லி மீட்டர். எனவே, இந்தளவிற்கு அபாரமான தண்ணீர் வளத்தைக் கொண்ட ஒரு மாநகரம் எப்படி கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் என்ற கேள்வி எழுகிறது.

இது முற்றிலும் நிர்வாக குறைபாடு தொடர்பான பிரச்சினையே. சென்னையின் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகர வளர்ச்சி திட்டங்கள் தீட்டப்படுவதில்லை. நிர்வாகத்துறையின் அலட்சியமும், அங்கே நடக்கும் முறைகேடுகளுமே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா