இந்தியா வாகன உற்பத்தித்துறையில் உலக அளவில் டிராக்டர் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர், 2வது இரு சக்கர வாகன உற்பத்தியாளர், ஐந்தாவது பெரிய ஹெவி டிரக் உற்பத்தியாளர், 6வது பெரிய கார் உற்பத்தியாளர், 8 வது வணிக வாகன உற்பத்தியாளராக விளங்கி வருகிறது.
இவ்வளவு சிறப்பம்சம் வாய்ந்த இந்திய வாகன உற்பத்தித்துறை இந்த வருடம் சரிவு ஆரம்பித்து உள்ளது. இந்திய வாகன உற்பத்தி அமைப்பு மே 13ம் தேதி ஏப்ரல் மாதம் கடந்த 8 வருடங்களில் இல்லாத அளவு 17% விற்பனை குறைந்துள்ளதாகத் தெரிவித்தது.
இந்திய வாகன உற்பத்தி அமைப்பு ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக 2,001,096 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன . அதே சமயம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் 2,380,294 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்தியப் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. அதே சமயம் நீண்ட காலமாக வாகன உற்பத்தித்துறைக்குப் பயனளிக்கும் விதமாகச் சலுகைகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் காரணங்கள் கிடைக்கப்பெறுகிறது.
ஜூன் மாதமும் வெகுவாக விற்பனை குறைந்துள்ள நிலையில் நாடெங்கும் பல விற்பனை முகவர்கள் வாகனங்களை விற்க முடியாத நிலையில் சிலர் தங்கள் நிறுவனங்களை முடி வரு கின்றனர். எந்த வாகன முகவர்களும் புதிய வாகனத்திற்கு ஆர்டர்களை கொடுக்கவில்லை யென்றும் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 3.7 கோடி பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிப் பாக உற்பத்தியும் குறைந்துள்ளதால் 3.7 கோடி பேர் வேலையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது
இந்திய வாகன துறை சந்திக்கும் சிக்கல்
ஏப்ரல் 1,2020 முதல் புதிய வாகன விதிகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 35 ஆயிரம் கோடி மதிப்புள்ள கார்கள் விற்பனையாகாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கார் நிறுவனங்கள் எல்லாமே தங்கள் உற்பத்தியை 20% நிறுத்திவைத்துள்ளன. இதன் மூலம் தங்கள் கார்கள் விற்க முடியும் என்று நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியை 28 % லிருந்து 18% சதமாக மாற்றவேண்டும் என்று பல கோரிக்கைகள் வலியுறுத்தி யும் அரசாங்கம் ஜிஎஸ்டியை குறைக்கவில்லை. அதே சமயம் ஏற்கனவே விற்பனையாகாமல் உள்ள வாகனங்களுக்கு டீலர்கள் ஜிஎஸ்டியை செலுத்தவேண்டும் என்பதால் அதைத் தவிர்க்க வாகன உற்பத்தியை நிறுத்தும் யுக்தியை கார் நிறுவனங்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
மின்கல (பேட்டரி) வாகனங்கள்
உலக அவில் பேட்டரி கார் உற்பத்தி நிறுவனங்கள் பல தொழில்நுட்பங்களுடன் களமிறங்கும் நிலையில் இந்தியாவில் எல்லா நிறுவனங்களிடம் இந்த தொழில்நுட்பம் இல்லை , ஆனால் அந்நிய நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தினை கையில் வைத்துக்கொண்டு இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கக் காத்துக்கொண்டுள்ளன. குறிப்பாகச் சீன நிறுவனங்கள். இந்திய நிறுவனங்கள் பேட்டரி கார் உற்பத்தியில் நிறைய முதலீடு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ள தொழில்நுட்பத்தினையும் எதிர்த்து நாம் செயல்படச் செய்யப்போகு முதலீட்டுக்கு அரசாங்கம் என்ன சலுகைகள் தரப்போகின்றது. போன்ற விசயங்களில் தெளிவில்லை
வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகள்
வெளிநாட்டு நிறுவனங்களின் கார்களின் சிறப்பசம்ங்கள் இந்திய நிறுவனங்களுக்குமுன் சிறப்பம் சங்களை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் நம் இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியும் அதிகரிக்கும்
வேலை இழக்கும் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள்
கார்களின் உற்பத்தி குறைவதால் கார்களுக்கான வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி தயாரிப்பு நிறுவனங்கள் பெரிதாகப் பாதிக்கப்படும். குறைந்த பட்சம் 10 லட்சம் பேர் வேலை இழப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது
தீர்வுகள்
அரசாங்கம் வாகன உற்பத்தித்துறை ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது மிக அவசியம். அதோடு வெ ளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்கும்போது இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் கார்களை உற்பத்தி செய்ய வைக்கும்போது நம் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து இயங்கிட வாய்ப்பு கிடைக்கும்.
உற்பத்தித்துறையின் ஆய்வுகளை மேம்படுத்தி நவீன நுட்பங்களான தானியங்கு வாகனங்கள், பொருட்களின் இணையம் எனப்படும் (ஐஓடி) தொழில்நுட்பங்களை இணைத்து புதிய புதிய பயன்பாடுகளைக் கொண்டுவரவேண்டியதும் நம் நிறுவனங்களின் அத்தியாவசயப்பணி. ஆனால் இதை அரசு ஊக்குவிக்காவிட்டாலும் நமது இந்திய நிறுவனங்களே தங்களது நிறுவனத்தினை தொடர்ந்து நிலைநிறுத்திட ஆராய்ச்சிகளை முடுக்கிவிட வேண்டியதும் அவசியம்
அரசு தரப்பு என்ன சொல்கிறது
வாகன உற்பத்தி சரிவு குறித்துக் கவலைப்படவேண்டியதில்லை. இது ஒன்றும் பொருளாதார சரிவிற்கான சமிக்கை அல்ல என்று தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமுர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உற்பத்தித்துறையில் வாகன உற்பத்தித்துறை ஒரு அங்கம்தான். ஆனால் வாகன உற்பத்தித்துறை சிறப்பாகச் செயல்படாவிட்டாலும் ஒட்டுமொத்த துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்றார்.
– செல்வமுரளி