கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட வந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

அதில் மொட்டையடித்து, உடல் எடை மிகவும் குறைந்து காணப்படும் அஜித்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபீஸில் ரூ. 200 கோடி வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் அடுத்ததாக AK 64 படத்திற்கு தயாராகி வருகிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாகக் கூறப்படும் ஏகே 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள GT4 கார் பந்தயத்தின் 3வது சுற்றில் கலந்து கொள்வதற்காக தற்போது தயாராகி வருகிறார் அஜித். இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அஜித் அங்குள்ள ஸ்பா பிராங்கோசாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி மேற்கொண்டார்.

இந்தப் படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் அஜித் கலந்துகொண்ட கார் பந்தயங்களில் அவரது அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்தடுத்த பந்தயங்களிலும் வெற்றிபெற அஜித் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.