மதுரை விமான நிலையத்தில்
ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா
கடிந்து கொண்டாரா?
* *


மதுரை விமான நிலையத்தில் நடந்த அமீத்ஷா- ஓ.பி.எஸ்.சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.தேசிய தலைவர் அமீத்ஷா மதுரை வந்திருந்தார்.காலையில் அவரை துணை முதல்வரும்,அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.
பின்னர் அமீத்ஷா ராமநாதபுரம் கிளம்பி சென்று விட்டார்.அவர் மதுரைக்கு மீண்டும் திரும்பி வரும் வரை அங்கே காத்திருந்தார்-ஓ.பி.எஸ்.மாலையில் மீண்டும் அமீத்ஷாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் என்ன நடந்தது?

இரண்டு முக்கிய விஷயங்கள் பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.
பிரதான விஷயம் இது:
‘’தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் போட்டியிடலாம்.பா.ஜ.க. சிறிய’பார்ட்னர்’தான்.5 தொகுதிகள் தான் கொடுத்திள்ளீர்கள்.எனினும் தமிழக கூட்டணியை அ.தி.மு.க.தலைமையிலான கூட்டணி என்று அழைக்கக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி என்றே அழைக்க வேண்டும்’’ என்று ஓ.பி.எஸ்.சை அமீத்ஷா நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்பட்டுகிறது.
இதனால் ஓபிஎஸ் ஆடிப்போய்விட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
நடந்தது என்ன?
பா.ஜ.க.பொதுச்செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதரராவ் அளித்துள்ள விளக்கம் இது:
‘’அமீத்ஷாவை ஓபிஎஸ் சந்தித்த போது நானும் உடன் இருந்தேன்.தமிழகத்தில் கூட்டணிக்கு யார் தலைவர் என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை.எங்களுக்கு சட்டப்பேரவையில் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லை.தமிழகத்தில் அ.தி.மு.க.ஆளுங்கட்சி.

 

பாப்பாங்குளம் பாரதி