சென்னை,
திமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது அதிமுக பிரமுகர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிமுக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு பொதுச்செயலாளர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

தற்போது ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க மறைமுகமாக முயற்சி செய்து வருகிறார். அதற்கேற்றார்போல், தற்போதைய தமிழக முதல்வர்,  அமைச்சர்கள், அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள்  அவரை அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், அதிமுக கட்சி தொண்டர்களிடையே சசிகலா பொதுச்செயலாளர் ஆவது பிடிக்கவில்லை. இதன் காரணமாக ஆங்காங்கே அதிமுக கூட்டங்களில் தகராறு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில்,  அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தான் அதிமுக பொதுச்செய லாளராக பொறுப்பேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுதும் சசிகலாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதிமுகவை தொடங்கிய 7 பேரில் ஒருவரான, திருச்சி மாவட்ட முன்னாள் அதிமுக செயலாள ரும், முன்னாள் எம்எல்ஏவான சவுந்திரராஜன் சசிகலாவை பொதுச்செ யலாளரக தேர்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் ஆக சசிகலாவுக்கு என்ன தகுதி இருக்கி றது என்றும், அதிமுக தொண்டர்கள் யாரும் சசிகலாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும்  கூறியிருக்கிறார்.
தற்போது அதிமுகவில் பதவியில் இருப்பவர்கள் மட்டும் தான் சசிகலா பொதுச்செயலாள ராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார்.
ஏற்கனவே ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கேநகர் தொகுதியில் சசிகலா போட்டியிட வலியுறுத்தி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து அதிமுகவை சேர்ந்த பெண்கள் சசிகலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.