மதுரை: கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக பாஜக கூறுவது பச்சைப் பொய் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பாஜகவினர், கச்சத்தீவு குறித்து ஆர்.டி.ஐ.யில் வெளியான தகவலை வைத்து பச்சை பொய்யை பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகறிது. இந்த தேர்தலில், திமுக மட்டும் 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது.
வரும் 19ந்தேதிவ க்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரு வாரங்கள் மட்டுமே இருப்பதால், அனல் பறக்கும் பிசாரம் நடைபெற்று வருகிறது. இந்த மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் செய்தார்.
அப்போதுர், வரும் மக்களவை தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ வெளியாகி உள்ளதாக பச்சைப் பொய்யை கிளப்பி விட்டுள்ளனர். ஜனநாயகம், நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர் என்று ஆர்என்.ரவியின் நடத்தை குறித்து விமர்சனம் செய்தவர், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாக மத்தியஅரசிடம் உதவி கேட்டால், அவர்கள் இதுவரை தமிழ்நாடு அரசுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று விமர்சித்தவர், பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல் பாஜகவை பற்றி மக்கள் எண்ணுகின்றனர் என்று கூறினார்.