தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி

Must read

சென்னை:

மிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் காலி குடங்களுடன் சாலையில் செல்லும் காட்சி தண்ணீருக்கு பதில் கண்ணீரை வரவழைக்கிறது. இது தொடர்பான வழக்கில், தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நீதிமன் றத்தின் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று தமிழக அரசு  அதிகாரிகளுக்கு நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் தட்டுப்பாடி குறித்தும், நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் குறித்து உயர்நீதி மன்றம் தானாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி  சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த  தீர்ப்பை பின்பற்றவில்லை என்றும்,  தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்காத தமிழக பொதுப்பணித்துறை செயலாளர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் மண்டல இயக்குனர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு  வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம், தண்ணீர் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாக அவமதிப்படுவதாகவும், மறுபுறம் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் திருடப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாகவும் விசாரணையின்போது கேள்வி எழுப்பினார்.

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை ஒழுங்குப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தனியார் நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ஏரி, குளம், விவசாய நிலம், தனியார் நிலம் ஆகியவற்றில் இருந்து சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரை உறிஞ்சி, அதை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சு பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

என சரமாரி கேள்விகளை எழுப்பினார். மேலும் கடந்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாததற்காக பொதுப்பணி துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் ஏன் தண்டனை வழங்கக் கூடாது?

தன்னுடைய கேள்விகளுக்கு அதிகாரிகள் 2 நாளில் பதிலளிக்க வேண்டும் என  உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமை (மே 20ம்) தேதிக்கு ஒத்திவைத்தது.

More articles

Latest article