தினமும் வெந்நீர் மற்றும் சாதாரண நீரில் நீராடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Must read

நாம் தினமும் வெந்நீர் அல்லது சாதாரண நீரில் குளிக்கின்றோம். இதனால் நமக்கு பல மருத்துவ பலன்கள் உண்டு. இதை தமிழர் பண்பாட்டில் நிறையவே காணமுடியும். ஆனால் அவை மறந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் அவ்வப்போது மஞ்சள் நீரில் திருவிழாக்களின் மஞ்சள் நீரை அனைவரின்மீதும் தௌித்து விளையாடுவார்கள். திருவிழாக்காலங்களில் மற்றும் முக்கிய தினங்களில் குளம், ஆறு, கடல் போன்றவற்றில் நீராடுவது  நம் பண்பாட்டில் இருந்து வந்தது, ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் காலம், நேரம்  , கிழமை, சுற்றுச்சூழல் போன்றவற்றை அடிப்படையாக மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்காக நம் பழக்கத்தில் இருந்தது.

பழ மொழிகள்
கூழானாலும் குளித்துக்குடி

கந்தையானாலும் கசக்கிக்கட்டு,

நீரில் மூழ்கி நினைவை மறந்திடு என்பது பட்டினத்தாரின்  பாடல் வரி

சித்த மருத்துவத்தில் பல குறிப்புகள் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தகுந்த குறிப்புகள் கீழே காணலாம்

எண்ணெய் தேய்த்துக்குளித்தால் தலைக்கு வெந்நீரில் குளிக்கவேண்டும் (தேரையர் நோய் அணுகா விதி) வாரம் ஒன்றிலிருந்து இருமுறை எண்ணெய் தேய்து குளிக்கலாம்.

ஆண்கள் புதன் கிழமை, சனிக்கிழமை , பெண்கள் செவ்வாய்,  வெள்ளிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பது நன்மை பயக்கும்

ஆற்று நீரில், பாசி இல்லாத தூய கிணற்று நீரில் ஆறு வற்றிய காலத்தில் ஆற்றில் தோண்டப் பெற்ற ஊற்று நீரில் ஞாயிற்றினால் மதியினுடையதுமான ஒளி கொண்டதும் நாள்தோறும் ஏற்ற, பொறிகளால் நீரை வெளிப்படுத்தப்படும் உள்ள நீரிலும், நாள்கோள் நீரை இறைத்து வெளிப் படுத்துகின்ற  ஏரி, குளம், பெருங்கிணறு இவைகளின் தண்ணீரிலும் உதயகால ஞாயுற்றொளி உடலை தழுவ பனிதம் பெறும் முக்கிய வேலையாக நன்கு தலை முதல் உடல் முழுவதும் நனைய நல்ல மணமுள்ள தாள்களை தேய்த்துக் கொண்டு நீராடினால் பெறுவது யாதெனில் கூறுவோம்.

ஆற்று நீரில் குளித்தால் வாதம் போகும் ( கை கால் மூட்டு வலி), அருவி நீரில் குளித்தால் பித்தம் போகும்( உடல் சூடு, பசியின்மை, ஜீரணக்கோளாறு, சோம்பல், குடல் எரிச்சல் )

மேற்கண்ட பாடலில் கிழமை வாரியாக என்னென்ன அனுபானங்கள் சேர்த்து குளிப்பதால் என்னென்ன பலன்  என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கான விதி முறைகள்,  பொதுவாக விடியற்காலையில் குளிப்பது சிறந்தது

வெந்நீரில் குளிப்பதால் பயன்

1. மன உளைச்சலைப்போக்கி(Stress,Depression )  மனதுக்கு அமைதியை தரும், இனிமையாக உறக்கத்தைக்கொடுக்கும், இது உடலில் உள்ள மெலாட்டின்(Melatenin) என்ற சுரப்பியை தூண்டி நன்கு மன அமைதியையும் உறக்கத்தையும் தூண்ட வழி செய்கிறது வெந்நீரில் குளித்து பிறகு உடனடியாக குளிர்விப்பதால் உடல்சம நிலை பெறுகிறது

2.வெந்நீரில் குளிப்பதால் தசை வலிகள், கை கால் வீக்கங்கள் மூட்டு வலிகள் (arthritis) போன்ற நோய்கள் கட்டுப்படுகிறது

3.SitBath என்ற குளியில் முறையில் வெந்நீரில் அமர்ந்து குளிப்பதால் உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்ற நோய்கள் Metabolic diseases மற்றும் நீரிழவு நோய் கட்டுப்படுகிறது. SitBath  முறையில் வெந்நீரில் அமரும்போது மூலநோய் (piles) வராது தடுக்கிறது. வெந்நீரில் திரிபலாவை கலந்து சிட்பாத் முறையில் 20 நிமிடம் அமர்ந்திருந்தால் ஆசன கடுப்பு நீங்கும்.

4.வெந்நீரில் குளிப்பதால் சளி, மூக்கடைப்பு, சுவாக்குழாய்கள் சீர்படுத்தப்பட்டு வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக வழி வகை செய்கிறது

5.வெந்நீரில் குளிப்பதால் குடடில் உள்ள இரத்த ஓட்டங்கள் சீர்படுத்தப்பட்டு குளுக்கோஸ் மற்றும் ஆக்சிஜன் அனைத்து செல்களுக்கும் சமமாக பிரித்தளித்து உடலை ஆரோக்கியப்படுத்துகிறது

6.வெந்நீரில் குளிப்பதன் மூலம் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் (Skin irritation) , சரும நோய்கள் வராது தடுக்கிறது

இதற்கு நாம் அழகு பெறவும் , ஆரோக்கியத்திற்காகவும், மன அமைதிக்காகவும் சில மூலிகைகளை வெந்நீரில் கலந்தோ, உபயோக்கி்க்கலாம். இதற்கு Aroma therapyஎன்றும் அழைக்கப்படுகிறது

அதில் சேர்க்கப்படுவது அரோமா மிக்ஸ்டு ஆயில் , ஆலிவ் எண்ணேய், லாவண்டர் எண்ணெய், ரோஜா எண்ணெய் , மல்லி எண்ணேய் போன்றவை மன அமைதிக்காக சேர்க்கப்படுகிறது

தோல் நோய் மற்றும் புண்களுக்கு திரிபலா( நெல்லி, கடுக்காய், தான்றிக்காய்களின் கலவை), சியக்காய், அரப்பு, முல்தானிமுட்டி, சுத்தமான களிமண், சோற்றுக்கற்றாழை, வேப்பக்கொழுந்து, வேம்புத்தூள் போன்றவற்றை மேற்பூச்சு மருந்தாக பூசி குளிக்கலாம், எடை குறைப்பும் நிகழும்
வெந்நீர் என்பது 25 டிகிரி செல்சியஸ் முதல் 39 செல்சியஸ் வரை குளிப்பது சிறந்தது. உங்கள் உடல் மற்றும் சூழல் போன்றற்றினை பொருத்து வெப்ப நிலையை வைத்துக்கொள்ளலாம்

குளிர்ந்த நீர்

Alertness, மூளை மற்றும் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்க வைக்கும், இது இரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தி உடலில் உள்ள அனைத்து செல்களையும் புத்துணர்வாக்கும்

நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும்

முடிமற்றும் தோலை பலபலப்பாக்கி ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்

ஆறுகளில் , பாசியில்லா கிணறுகளில் குளிக்கும்போது உடல் எடை குறையும்

மன உளைச்சலைப்போக்கும்(Stress,Depression )

இருதயத்தினையும் , மூலிகையையும் நன்கு இயக்கும்

உடல்சூட்டினால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தினால் Testoserone என்ற ஹார்மோனை குறைபாடு ஏற்படுகிறது, 15 நிமிடம் குளிர்ந்த நீரால் குளிப்பதால் Testoserone ஹார்மோனை தூண்டு கிறது.இதனால் ஆண்மை குறைவு நீங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது,

https://www.tandfonline.com/doi/abs/10.3109/01485018808987051

எந்த வகை நீரிலும் குளிக்கக்கூடாதவர்கள்

நோயின் தன்மையை பொருத்து காதுகளிலும், கண்களிலும் நோய் உள்ளபோது குளிக்கக்கூடாது. செரியாமை, ஜீரண குறைபாடு உள்ளவர்கள் , முகப்பணி , தோல் நோய், நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை ஆலோசித்து குளிக்கலாம் அல்லது துணியால் ஒற்றி எடுக்கலாம்.

வயிற்றில் அதிகமான உணவு உண்டபின் குளிக்கக்கூடாது

மருத்துவர். பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002

 

More articles

Latest article