ன்றைய காலகட்டத்தில் இந்தியா மக்கள் தொகையில்  50%க்கு மேலானோர் இன்னமும்  இணையப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற சூழ்நிலையிலும் அதிகமான மக்கள் தொகை காரணமாகத் திறன்பேசிகள் (smart phone), இன்டர்நெட் (Internet) பயன்பாட்டிற்கு மக்கள் அடிமையாகி உள்ளது  என்பது மறுக்கமுடியாத உண்மையாக இருக்கிறது

18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகமாகத் திறன்பேசிக்கு அடிமையாகி உள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன,. 0.3 முதல் 11.8% வரை இளைஞர்கள் திறன்பேசிக்கு அடிமையாகி யுள்ளார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதில் 10 முதல் 20 வரை வயதுடையவர்களும், வயதானவர்களும் அடங்கும். திறன் பேசி கல்வி சார்ந்த பயன்பாட்டினை விடப் பொழுதுபோக்கு, நேர விரயம் சார்ந்த பயன்பாட்டுக்கே அதிகமாகப் பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

அதிக நேரம் இணையத்தினை மற்றும் திறன்பேசிகளை அதிகமாகப் பயன்படுத்துவதை சைபர் அடிக்சன் (cyber Addiction), Internet Addiction Disorder என்று அழைப்பார்கள். இதைத் தேவைக்கு அதிகமாகத் திறன்பேசி மற்றும் இணையத்தளம்  பயன்படுத்துபவர்களை இந்த நோய்க்கு அடிமை என்று அழைக்கிறார்கள். இதில் அதிகமாக இணையப்பயன்பாடு இரவில் மட்டுமே அதிகமாக நிகழ்கிறது என்று அறிவுறுத்தியுள்ளது.

கதிர்வீச்சு

1.6 w/kg என்ற கதிர்வீச்சு அளவினை மனிதர்கள் பயன்படுத்தலாம் என்பதை Specific Absorption Rate (SAR) for Cellular Telephones  என்ற ஆய்வு குறிப்பிடுகிறது.

கைப்பேசி அதிக கதிர்வீச்சினை பயன்படுத்தும்போது அது சார்ந்த நோய்கள் மனிதர்களைத் தாக்கும். இதை ரஜினி அவர்கள் நடித்த 2.0 படத்தில் கண்டிருக்கலாம்.

நோய்கள்

·  மூளை கட்டி -Brain Tumor

·  மூளை புற்றுநோய் -Glioma

·  ஹார்மோன் குறைபாடு – Hormone Disturbance

·  செல்களின் உள்ள டிஎன்ஏ சிதைவு – DNA Damage

·  ஆண் மலட்டுத்தன்மை – Sperm Loss

·  காதுகேளாமை Conductive Neural Hearing Loss,Pendrey Syndrome

·  கண் குறைபாடு

·  வாந்தி

·  வலிப்பு நோய்

·  படபடப்பு

·  மன அழுத்தம்

·  தூக்கமின்மை

·  ஒற்றைத் தலைவலி

·  Virtual Relationships – இணைய தளத்தின் மூலமாகப் பெறும் நட்பு

·  குழந்தைகளுக்கு  ADHD ஆகிய மாறுபாட்டினால்  Emotional & Behaviour எனும் நடத்தை மாறுபாடு மற்றும் மனம் சார்ந்த நோய்கள் ஏற்படும்

செல்பேசி மற்றும் இணையத்தளத்தால் வரும் மனம் சார்ந்த நோய்கள்

·  Phantom Vibration Syndrome,  கைப்பேசி எப்போதும் அதிர்ந்துகொண்டே இருக்கும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருப்பது

·  Phantom  Ringing Syndrome , செல்போன் அடிக்கவில்லை என்றாலும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற எண்ணம்

·  Nomophobia – செல்போன் இல்லாமல் இருப்பதால் பயமாக இருப்பது போன்று தோன்றுவது

·  Cyber Sex- இணையத்தளம் மற்றும் செல்பேசியைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைப் பார்த்து அடிமையாவது

·   Narcissisn- அனைத்து இடங்களிலும் செல்பி (தம்படம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது

சுய பரிசோதனை

நீங்கள் மேற்கண்ட நோய்களுக்கு அடிமையா என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்க  கீழ்க்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் அளித்துப் பரிசோதித்துப் பார்க்கலாம்

·  உங்களுடைய முந்தைய இணையத்தள நடவடிக்கைகள் விரைவாக முடிந்துவிட்டதா?

·  உங்கள் இணையத்தள பயன்பாடு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்துவிடுகிறதா?

·  உங்கள் இணையத்தள பயன்பாடு திருப்திகரமாக இருக்கிறதா?

·  உங்கள் இணையத்தள பயன்பாட்டையும், செல்பேசியையும் உங்களால் பயன்படுத்த முடியாமல் இருக்க முடிகிறதா?

·  வேலை நேரத்திலும், முக்கிய நேரத்திலும் இணையத்தளத்தில் எப்போதும் இருக்கின்றீர்களா?

·  உங்கள் இன்டர்நெட் பயன்பாடு மற்றும் செல்பேசி பயன்பாடு தேவைக்கு மட்டும் பயன்படுத்து கிறீர்களா?

·  உங்களுக்கு பிரச்சினை வரும் போது மட்டும் அதிலிருந்து தப்பிக்க இணையத்தைப் பயன்படுத்து வீர்களா?

·  இணையத்தில் ஏதேனும் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடிவருகின்றீர்களா?

·  இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கிக்கொண்டே இருக்கிறீர்களா?

·  இணையத்தில் சூதாட்டம் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருக்கிறீர்களா?

·  சமூக இணையத்தளங்களை அதிகமான பயன்படுத்துகிறீர்களா?

உதாரணமாக

மன அழுத்தம் , உதவியற்ற நிலை, தனிமை, சரியான மனநிலை இன்மை, மன ஒருமைப் பாடின்மை இல்லாத நேரத்தில் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றீர்களா?

சைபர் அடிமையாவதை (Cyber Addiction) தடுக்கும் முறைகள்

·  பள்ளி/ கல்லூரியில் செல்போன்களை பயன்படுத்தாமல் இருப்பது

·  கார் / இரு சக்கர வாகனங்கள் /பயணங்களில் தேவையில்லாமல் செல்போன்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது

·  செல்போனில் கதிர்வீச்சைத் தடுப்பதற்காக  Headset பயன்படுத்தலாம்,

·  இரவு உறங்கும்போது செல்போனை ஏரோபிளான் மோடுக்கு மாற்றி படுக்கையை விட்டுத் தள்ளி வைப்பது சிறந்தது

·  படுக்கும்முன் செல்போனை பேசுவது, அதைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது

·  பயணத்தின் போது செல்போன் பேசுவதால் விபத்துகள் ஏற்படும் , மேலும் கதிர்வீச்சுக்கள் அதிகமாகவும் இருக்கும்.

·  லேண்ட்லைன் போனை பயன்படுத்தலாம்

·  சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் அதிக நேரம் படம் பார்க்கக்கூடாது மற்றும் அதிக நேரம் பேசக்கூடாது

·  குழந்தைகளிடம் திறன் பேசிகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும், அதனால் மனம் சார்ந்த நோய்கள் ஏற்படாது

·  ஸ்பீக்கர் போட்டு செல்பேசியில் பேசலாம்

·  அவ்வப்போது கண் பயிற்சி , தியானம் செய்வது நல்லது

யோகா பலன்கள்

தியானம், மூச்சுப்பயிற்சி, கண் பயிற்சி, தற்சோதனை இவற்றைத் தினமும் செய்து பாருங்கள்

தீர்வுகள்

·  குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது

·  வளர்ப்பு பிராணிகளை பராமிரப்புது

·  வீட்டுத்தோட்ட வேலைகள்

·  விவசாயப்பணிகள்

·  விளையாடுவது

·  அண்டை அயலாருடன் நட்பு பாராட்டி இருப்பது

·  புத்தகம்  படிப்பது

·  தியானமும், தற்சோதனையும் மிகவும் முக்கியம்

மேற்கண்ட தீர்வுகளை தொடர்ந்து செய்து வாருங்கள் , ஆரோக்கியமாக வாழ்வோம்

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS., PhD

அரசு மருத்துவர்

கல்லாவி

99429-22002