ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்னாச்சு…?

Must read

*** காங்கிரசை வீழ்த்துவதற்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பெருங்குரலில் இப்படிக் கூவினார்… ” ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன்…! ”

ஆனால், வருடங்கள் ஏழு ஓடி விட்டன!

அந்தக் கணக்கின் படி இது வரை 14 கோடி இளைஞர்களுக்கு அவர் வேலை கொடுத்து இருக்க வேண்டும்! ஆனால் அப்படி எந்த ஒரு ‘அதிசயமும்’ நடக்கவில்லை!!

ஆனால்… இதை விட ஒரு காமெடி,கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்தது! அங்கே வெறும் 600 அரசு வேலை வாய்ப்புகளுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் திரண்டு வந்து ‘ சரித்திரம்’ படைத்து விட்டார்கள்!

இதைப் பார்த்ததும், ” மோடி மாநிலத்திலேயே இப்படி மோசமான நிலையா? ” என்று மக்கள் கேட்கிறார்கள்!!

“அப்புறம் எங்கே ஆண்டுக்கு 2 கோடி வேலை தருவது? ” என்று கேலி பேசுகிறார்கள் மக்கள்!

More articles

Latest article