சென்னை:

மது ராணுவ வீரர்களையும், விமானப்படையும் வைத்து ஓட்டுக் கேட்பது வெட்கக்கேடு என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மோடி உள்பட பாஜக தலை வர்கள் புல்வாமா பயங்கரவாத தாக்குதல், அதையடுத்து நடைபெற்ற பாலகோட் தாக்குதல்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர். இது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சமீபத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இளைஞர்களை கவரும் வகையில்,  உங்களது முதல் ஓட்டடை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா?, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக் காக அர்ப்பணிக்க முடியுமா?” என்று  கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நடிகர்  நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில், “இறந்து போன போர் வீரர்களை வைத்து, நமது விமானப் படையை வைத்து ஓட்டுக் கேட்கிறார். ஏதோ நமது படைகள் இவருக்கும் இவரது கட்சிக்கும் மட்டுமே வேலை செய் வதைப் போல. தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாற்றப்படுகிறது. என்ன ஒரு வெட்கக் கேடு” என்று கடுமையாக சாடி உள்ளார்.