நடிகர் ரஜினி, அவதார புருசரா என்று வைகோ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூட்ரினோ திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய வைகோ தெரிவித்ததாவது: “நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு எதிரானது, இயற்கை சூழலுக்கு எதிரானது என்பதால் அதற்கு தடை வாங்கினேன்.

சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது என்று சொல்லிக்கொண்டு சும்மா உட்கார்ந்து இருக்க வில்லை.. நானே தமிழகத்தை காப்பாற்ற வந்த ரட்சகன் என்று விளம்பர படுத்தி கொள்ளவில்லை….!” என்று வைகோ பேசினார்.

, “பதவியை எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டிற்காக போராடுபவர்கள் இருக்கும் போது நாற்பது வருடம் கழித்து தற்போது சிஸ்டம் சரியில்லை என்று அரசியலுக்கு வருபவர்கள் என்ன அவதார புருசரா, இல்லை கிருஷ்ணனா.?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார

“சிஸ்டம் சரியில்லை” என்று சொல்லிவரும் நடிகர் ரஜினியை வைகோ மறைமுகமாக தாக்கிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.