டிரினிடாட்

ந்திய அணிக்கு எதிரான டி 20 போட்டிகளின் மேற்கிந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது..  இதில் 2 டெஸ்ட், 3 ஒரு நாள், மற்றும் 5 டி 20 ஆகிய போட்டிகள் உள்ளன.  இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்னும் கணக்கில் கைப்பற்றி உள்ளது.  மொத்தம் உள்ள ஒரு நாள் போட்டிகளில் இரு போட்டிகள் முடிந்து இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இன்று 3 ஆம் ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.  இந்த போட்டிகள் முடிந்த பிறகு டி 20 போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் வரும 3 ஆம் தேதி தொடங்குகின்றது.  இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது மேற்கிந்திய வீரர்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய  அணியில்,

ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணை கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகெல் ஹோசைன், அல்ஜாரி ஜோசப், பிரண்டன் கிங், ஓபெட் மெக்காய், நிகோலஸ் பூரன், ரொமெரியோ ஷெப்பர்ட், ஓடேன் ஸ்மித், ஓஷேன் தாமஸ்.

ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.