இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளது.
1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் முன்னணி அணியாக திகழ்ந்துவந்த மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் இடம்பெறாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1. நியூசிலாந்து 2. இங்கிலாந்து 3. இந்தியா 4. ஆஸ்திரேலியா 5. பாகிஸ்தான் 6. தென் ஆப்பிரிக்கா 7. பங்களாதேஷ் 8. ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் உலகக்கோப்பை போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
10 அணிகள் கலந்துகொள்ள இருக்கும் இந்த போட்டித்தொடரில் இடம்பெற உள்ள மேலும் இரண்டு அணிகளை தேர்வு செய்ய தகுதிச் சுற்று போட்டிகள் மேற்கு இந்திய தீவுகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
6 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவிய மேற்கு இந்திய தீவுகள் அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.
இலங்கை மற்றும் ஜிம்பாபவே அணி முதல் இரண்டு இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த அனைத்து போட்டியில் வெற்றிபெற்றாலும் ரன் ரேட் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால் அதனால் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.