கொல்கத்தா
உக்ரைன் போர் முனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் சேவை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களை அரசு பத்திரமாக மீட்டு வருகிறது. போரில் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
எனவே இங்குச் சிக்கி உள்ள இந்தியர்களை அருகில் உள்ள நாடுகளுக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்திய அரசு அழைத்து வருகிறது. இந்த போரில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் நவீன் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் நாளை இந்தியாவுக்கு எடுத்து வரப்பட் உள்ளது.
இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவலை மேற்கு வங்க மாநிலம் கொலத்தாகவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் சாரிடி நிறுவனத் தலைவர் சகோதரி மேரி ஜோசப் தெரிவித்துள்ளார்.
மேரி ஜோசப். “உக்ரைனில் எங்கள் கன்னியாஸ்திரீ சகோதரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அங்குத் தங்கி மக்களுக்குச் சேவை செய்ய முடிவு எடுத்துள்ளனர். எங்கள் உயிரைக் காக்க நாங்கள் தப்பி வந்தால் அங்குச் சேவை செய்ய யார் உள்ளனர்? எனவே தொடர்ந்து மக்களுக்குச் சேவை செய்யச் சகோதரிகள் முடிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]