கொல்கத்தா:
ர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று அவசியம் என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்று கட்டாயமாக்கப்படுகிறது. வரும் 27ஆம் தேதி நண்பகல் முதல் மேற்குவங்க மாநிலத்திற்கு வரும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த RT-PCR சோதனையில் கொரோனா இல்லை என்ற அறிக்கையை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இந்த மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்றும், இந்த கட்டுப்பாடு பிப்ரவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்திய முதல் மாநிலம் மேற்கு வங்கம் அல்ல. ஏற்கனவே டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொரோனா எதிர்மறை அறிக்கைகளை கட்டாயமாக்கியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.