கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  மோடி மிகப்பெரிய கலகக்காரர்…. டிரம்ப்பை விட மோசமான விதி அவருக்கு காத்திருக்க, காத்திருக் வங்க மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி என்று  மம்தா ஆவேசமாக பேசினார்.
மேற்கு வங்க மாநிலத்திலும் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மம்தா கட்சியில் இருந்து சிலரை, பாஜக தன்வசம் இழுத்துள்ள நிலையில், அங்கு அரசியல் களம் திகுதிகுவென அனல் பறந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை  மேற்குவங்க மாநிலம் ஹுக்ளியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த நிலையில், நேற்று முதல் 48 மணி நேர பிரசாரப் பயணத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னெடுத்து வருகிறார். ஹூக்ளி மாவட்டம் சஹாகஞ்சில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை முதன்மை இலக்காக வைத்து  கடுமையாக விமர்சித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு (முன்னாள் ஜனாதிபதி) என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? அவர் (மோடி) டிரம்பை வெற்றிபெறச் செய்ய விரும்பினார், ”என்று மோடியின் 2019 பயணத்தின் போது அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் மோடியின் “அப் கி பார், டிரம்ப் சர்க்கார்” கருத்துக்கு  பதில் தெரிவிக்கும் வகையில்,  “அவரது (மோடியின்) நிலை டிரம்ப்பை விட மோசமாக இருக்கும்” என்று பானர்ஜி கூறினார்,
மோடி ஒரு “டாங்காபாஸ்” (கலகக்காரர்) மற்றும் அசுரன் போன்ற சொற்களால் மோடியை கடுமையாக தாக்யி பேசியவர், மோடி அ னைத்து எல்லைகளையும் உடைத்து வங்காள கலாச்சாரத்தை களங்கப்படுத்துகிறார் என்று கூறினார். அரசியல் சொற்பொழிவில் கண்ணியமாக வங்கம் அறியப்படுகிறது. ஆனால், மக்கள் வெட்கப்படுகிறார்கள் என்றவர்,  அவர்களிடையே மோடி  மிகவும் தாழ்ந்திருக்கிறார். அவர் வங்காளத்தின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அழித்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார்.
இந்த மண்ணில் பாஜக எங்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன் என்றும், வன்முறை யிலிருந்து எதையும் பெற முடியாது என்று எச்சரித்தவர்,  மோடியும் அவரது நண்பரான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்களையும், வெறுப்புணர்வையும் பரப்பி வருகிறார்கள் இந்த இரண்டு மாதங்களில் எவ்வளவு பேச முடியுமோ பேசிக் கொள்ளுங்கள். ஏனெனில், அதற்கு பிறகு நாங்கள் தான் பேசுவோம்.  இன்று அவர் (பிரதமர் மோடி) அப்பதவியில் இருக்கிறார். நாளை இருக்கமாட்டார். அவர் பொய் சொல்கிறார்.
நிலக்கரி சுரங்க வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் மனைவியிடம் சிபிஐ விசாரணை நடத்தி உள்ளது.   நிலக்கரி கடத்தல்காரர்கள் தங்கள் (பாஜக தலைவர்கள்) பைகளில் உள்ளனர், அவர்கள் நிலக்கரி கடத்தல்காரர்களுக்கு சொந்தமான ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்கள் (பாஜக) எங்கு தாக்குகிறார்கள் என்று சிந்தியுங்கள். அவர்கள் நமது  வீட்டிற்குள் நுழைந்து 22-23 வயதுடைய ஒரு இல்லத்தரசியை  நிலக்கரி கடத்தல்காரர் என்று குற்றம் சாட்டுகிறார்கள், ” இது, நமது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். அவர்கள் தாய்மார்கள் மற்றும் மகள்கள் நிலக்கரி கடத்தல்காரர்களை முத்திரை குத்துகிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு  துணிச்சல்.
நடைபெற உள்ள  வங்காள சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு கோல் கூட அடிக்க முடியாது, ஏனென்ற்ல்நான் கோல்கீப்பராக இருப்பேன், . எங்கள் அனைவரையும் கைது செய்யுங்கள். நான் உட்பட 20 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். நீங்கள் என்னை இங்கே அடக்கம் செய்தீர்கள் என்றால், நான் டெல்லியில் ஒரு மரம் போல் வளர்வேன். காயப்பட்ட புலி ஆபத்தானது. விளையாட்டு தொடங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் நீங்கள் (வாக்காளர்கள்) அவர்களை (பிஜேபி) தோற்கடிக்க முடிந்தால், அவர்கள் இந்தியாவில் இருந்தே காணாமல் போய் விடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு மம்தா ஆவேசமாக பேசினார்.
மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு  மாதங்களில் நடைபெற உள்ளது.  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் முயற்சி எடுத்து வருகிறது. அவரிடம் இருந்து ஆட்சியை எப்படியாவது பிடுங்கி விட வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், அங்கு தேர்தல் களம் கடுமையாக சூடுபிடித்துள்ளது.